செய்திகள்
கொரோனா பரிசோதனை

கும்பமேளாவின்போது பரிசோதனை: ஒரு லட்சம் போலி கொரோனா முடிவுகள்- முதல் கட்ட விசாரணையில் தகவல்

Published On 2021-06-15 15:44 GMT   |   Update On 2021-06-15 16:05 GMT
கொரோனா வைரஸ் பரவல் இருக்கும்போது கும்பமேளாவுக்கு அனுமதி கொடுத்ததற்காக மத்திய-மாநில அரசுகள் மீது பல்வேறு தரப்பில் இருந்தும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டது.

டேராடூன்:

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவார், டேராடூன், தெக்ரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஏப்ரல் 1-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை பிரசித்தி பெற்ற கும்பமேளா விழா நடைபெற்றது.

இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கங்கை நதியில் புனித நீராடினார்கள்.

அந்த சமயத்தில் உத்தரகாண்ட் முழுவதும் கொரோனா தொற்றால் ஏராளமான பேர் பாதிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியானது.  கொரோனா வைரஸ் பரவல் இருக்கும்போது கும்பமேளாவுக்கு அனுமதி கொடுத்ததற்காக மத்திய-மாநில அரசுகள் மீது பல்வேறு தரப்பில் இருந்தும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டது.

இதையடுத்து கும்பமேளா நடைபெறும் பகுதிகளில்  கொரோனா பரிசோதனை  மேற்கொள்வதற்காக 24 தனியார் ஆய்வகங்கள் பணியில் அமர்த்தப்பட்டன. இதற்காக கோடிக்கணக்கான பணம் ஆய்வகங்களுக்கு வழங்கப்பட்டன.

இந்த ஆய்வகங்கள் நடத்திய சோதனையில் தினமும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக முடிவுகள் வந்தன.

இதற்கிடையே உத்தரகாண்டில் நடந்து முடிந்த கும்பமேளாவின் போது போலி கொரோனா சோதனை முடிவுகள் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிடம் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது.

 



அவர்கள் நடத்திய முதல் கட்ட விசாரணையில் குறிப்பிட்ட ஆய்வகத்தில் இருந்து ஏராளமான போலி கொரோனா முடிவுகள் வந்திருப்பது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து உத்தரகாண்ட் அரசு இந்த விவகாரம் குறித்து தீவிர விசாரணை நடத்த 3 பேர் கொண்ட குழுவை அமைத்தது. இந்த குழு 15 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிப்பார்கள்.

இதையும் படியுங்கள்.... கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை: மத்திய அரசு வெளியீடு

 இந்த நிலையில் கும்பமேளாவின்போது எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் 1 லட்சம் முடிவு போலியானது என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 50 பேருக்கு மேல் பதிவு செய்ய ஒரே தொலைபேசி எண் பயன்படுத்தப்பட்டது தெரிய வந்தது.

அதே நேரத்தில் ஒரு ஆன்டிஜென் டெஸ்ட் கிட் 700 மாதிரிகளை சோதித்ததாககாட்டப்பட்டது.

மேலும் முகவரிகள், பெயர்கள் போலியானது. அனைத்தும் கற்பனையில் இருந்தது தெரிய வந்துள்ளது. ஒரே முகவரியில் 530 மாதிரிகள் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஒரு வீட்டில் 500-க்கும் மேற்பட்டவர்கள் குடியிருக்க முடியுமா?

மேலும் பல்வேறு நகரங்களில் கொடுக்கப்பட்ட முகவரியும், செல்போன் எண்ணும் போலியானது என்றும் கண்டறியப்பட்டது.

Tags:    

Similar News