செய்திகள்
காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களை படத்தில் காணலாம்.

குடிநீர் வராததால் ஆத்திரம்: காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

Published On 2020-11-11 09:32 GMT   |   Update On 2020-11-11 09:32 GMT
தஞ்சையில் குடிநீர் வராததால் ஆத்திரம் அடைந்த பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்:

தஞ்சை வடக்குவாசலில் குடிசை மாற்றுவாரியத்திற்கு சொந்தமான குடியிருப்பு உள்ளது. இங்கு 120 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அகழிகரையோரத்தில் உள்ள குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இந்த குழாயை அடைத்துவிட்டு வடக்குஅலங்கம் அரசமரத்தடி அருகே புதிதாக குழாய் அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. 

இதில் சரிவர குடிநீர் வரவில்லை என தெரிகிறது. கடந்த 3 நாட்களாக குடிநீர் வராததுடன், ஆழ்குழாய் கிணறு மின்மோட்டாரும் பழுது ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த 30-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் தஞ்சை வடக்குவீதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அறிந்த மேற்கு போலீசார் மற்றும் தி.மு.க. பிரமுகர்கள் விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி குடியிருப்பு பகுதிகளுக்கு அழைத்து சென்றனர். பின்னர் மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து, குடிநீர் வினியோகம் செய்ய மாற்று ஏற்பாடு செய்வதாக கூறியதை தொடர்ந்து அனைவரும் தங்களது வீடுகளுக்கு சென்றனர்.
Tags:    

Similar News