செய்திகள்
கைது

திருப்பூரில் வழிப்பறி கொள்ளையர்கள் 3 பேர் கைது

Published On 2019-09-06 12:07 GMT   |   Update On 2019-09-06 12:07 GMT
திருப்பூரில் வழிப்பறி கொள்ளையர்கள் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர்:

திருப்பூர் கணக்கம்பாளையத்தை சேர்ந்தவர் ராஜ் (வயது 42). இவர் கடந்த 3-ந்தேதி அணைக்காடு பகுதியில் நடந்து சென்றார். அப்போது அவரை வழிமறித்த 3 வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த கைக்கடிகாரம், செல்போன், பணம் உள்ளிட்டவற்றை பறித்து சென்றனர்.

இதுதொடர்பாக அவர் திருப்பூர் வடக்கு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான போலீசார் வாலிபர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் கல்லூரி ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது சந்தேகத்திற்கிடமாக வந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர். தொடர்ந்து அவர்களிடம் விசாரித்த போது திருப்பூரில் வழிப்பறி வழக்கில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து நடந்த விசாரணையில் அவர்கள் 3 பேரும் சென்னை பல்லாவரத்தை சேர்ந்த சவுகத் அலி, கீழ்பாக்கம் அண்ணா காலனியை சேர்ந்த பீர் முகமது, அருண் என்பதும் இவர்களுக்கு சென்னையில் பல்வேறு வழக்குகள் இருப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து 3 பேரையும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News