செய்திகள்
சிவசேனா பிரமுகர் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட காட்சி

முஸ்லிம்கள் போராட்டத்தின் போது சிவசேனா பிரமுகர் கார் கண்ணாடி உடைப்பு - 12 பேர் மீது வழக்கு

Published On 2020-01-11 09:54 GMT   |   Update On 2020-01-11 09:57 GMT
திருப்பூரில் முஸ்லிம்கள் போராட்டத்தின் போது சிவசேனா பிரமுகர் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து 12 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
திருப்பூர்:

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக திருப்பூரில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. நேற்று மாலை முஸ்லிம் அமைப்புகள் சார்பில் அந்தந்த பகுதியில் உள்ள மசூதிகள் முன்பு ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. அதனையும் மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் சி.டி.சி. கார்னர் பகுதியில் 9 பள்ளி வாசல்களை சேர்ந்தவர்கள் ஒன்று திரண்டு ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அந்த சமயத்தில் சிவசேனா கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் தினேஷ் தனது காரில் அங்கு வந்து கொண்டிருந்தார். அவரது காரை ஆர்ப்பாட்டம் நடைபெறும் பகுதிக்கு செல்ல விடாமல் போலீசார் தடுத்தனர்.

ஆனால் அதனையும் மீறி தினேஷ் காரை ஓட்டி சென்றார். அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு இருந்தவர்கள் கல் மற்றும் ஹெல்மெட்டுகளை தினே‌ஷ கார் மீது எறிந்தனர். இதில் கார் கண்ணாடி உடைந்தது.

இதனால் பரபரப்பு உருவானது. தினேஷ் மற்றும் அவரது காரை போலீசார் மீட்டு பத்திரமாக அனுப்பி வைத்தனர். இது குறித்து திருப்பூர் தெற்கு போலீசில் புகார் செய்யப்பட்டது.

கார் கண்ணாடியை உடைத்ததாக 12 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் தடையை மீறி பேரணியாக வந்து ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 3 முஸ்லிம் அமைப்புகள் மீது தனித் தனியாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Tags:    

Similar News