செய்திகள்
வாக்காளர் பெயர் சேர்த்தல் முகாமினை கலெக்டர் சிவன்அருள் ஆய்வு செய்தபோது எடுத்தப்படம்.

வாக்காளர் அட்டை இல்லாதவர்கள் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் பேட்டி

Published On 2020-11-22 13:11 GMT   |   Update On 2020-11-22 13:11 GMT
வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் புதிய அடையாள அட்டை பெற தாலுகா அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் என சிறப்பு சுருக்க திருத்த முகாமை ஆய்வு செய்த கலெக்டர் சிவன் அருள் கூறினார்.
திருப்பத்தூர்:

தமிழகத்தில் நேற்று வாக்காளர் பெயர் சேர்த்தல் சிறப்பு சுருக்க திருத்த முகாம் நடந்தது. திருப்பத்தூரில் தோமினிக் சேவியோ மேல்நிலைப்பள்ளி, பேரி மகளிர் மேல்நிலைப்பள்ளிகளில் நடந்த முகாமை கலெக்டர் சிவன்அருள், நேரில் சென்று ஆய்வு செய்தார். வாக்காளர் பட்டியல் மற்றும் பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்ட படிவங்கள் உள்ளதா என கேட்டறிந்த அவர் புதிய வாக்காளர்களிடம் அடையாள அட்டை இருப்பிடச் சான்றிதழ் ஆகியவற்றை சரிபார்த்தார்.

பின்னர் நிருபர்களிடம் கலெக்டர் சிவன்அருள் கூறியதாவது-

வாக்காளர் பெயர் சேர்த்தல் நீக்கல் சிறப்பு முகாமையொட்டி நகராட்சிகள், சப்-கலெக்டர் அலுவலகம், வருவாய் கோட்ட அலுவலகங்கள் மற்றும் பிரத்தியோக மையங்களிலும் கிராமங்களில் அரசு பள்ளிகளிலும் பொதுமக்கள் பார்வைக்கு வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டு உள்ளது. அனைத்து பொதுமக்களும், தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என சரிபார்க்கலாம். பெயர் இல்லைாவிடில் பெயரை சேர்க்க படிவம் 6, நீக்குவதற்கு படிவம் 7, திருத்தம் செய்ய படிவம் 8, சட்டமன்ற தொகுதிகளுக்குள் முகவரி மாற்றம் செய்ய படிவம் 8ஏ ஆகிய படிவங்களை வாங்கி பூர்த்தி செய்து கொடுக்கலாம்.

வாக்காளர் அடையாள அட்டை மட்டும் இல்லாதவர்கள் பெயர் சேர்க்க விண்ணப்பம் அளிக்க தேவையில்லை. அவர்கள் நகல் வாக்காளர் அடையாள அட்டை பெற அந்தந்த தாலுகா அலுவலகங்களில் 001 சிபடிவம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி மற்றும் நாளையும் (அதாவது இன்று) மற்றும் டிசம்பர் 12, 13, ஆகிய விடுமுறை நாட்களில் சிறப்பு முகாம் நடக்கிறது. சிறப்பு முகாமினை பயன்படுத்தி பொதுமக்கள் அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் செய்யலாம். ஆய்வின்போது தாசில்தார் மோகன், தேர்தல் பிரிவு தாசில்தார் நவநீதம் உள்பட பலர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News