செய்திகள்
பயணிகளின் உடமைகளை ரெயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரெயில்வே போலீசார் சோதனை செய்தபோது எடுத்தபடம்.

திருவாரூர் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை

Published On 2020-11-12 08:39 GMT   |   Update On 2020-11-12 08:39 GMT
தீபாவளியை முன்னிட்டு திருவாரூரில் ரெயில் நிலையத்தில் பயணிகளிடம் ரெயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினர்.
திருவாரூர்:

ரெயில்களில் எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகை வருகிற 14-ந்தேதி கொண்டாடப்படுகிறது. எனவே ரெயில்களில் செல்லும் பயணிகள் பட்டாசுகளை கொண்டு செல்ல கூடாது என ரெயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி ரெயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரெயில்வே போலீசார் இணைந்து திருவாரூர் ரெயில் நிலையத்தில் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சோதனை செய்தனர்.

இதில் ரெயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், சோளராஜு, ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் பாதுகாப்பு படை போலீசார் ரெயிலில் வந்த பயணிகளின் உடமைகளை சோதனை செய்தனர். அப்போது பட்டாசு எடுத்து செல்ல கூடாது எனவும், இதனை மீறினால் 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பயணிகளிடம் வழங்கினர். ரெயில் நிலையத்தில் தொடர் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags:    

Similar News