செய்திகள்
கோப்புப்படம்

இஸ்ரேல் போராட்டத்தில் மோதல் - ராணுவ வீரர்களின் துப்பாக்கிச்சூட்டில் பாலஸ்தீன சிறுவன் பலி

Published On 2021-06-12 18:59 GMT   |   Update On 2021-06-12 18:59 GMT
பாலஸ்தீனத்தின் காசா நகரில் உள்ள ஹமாஸ் போராளிகளுக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் கடந்த மாதம் 10-ந் தேதி தொடங்கி 11 நாட்கள் கடுமையான சண்டை நடந்தது.
ஜெருசலேம்:

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது. ஜெருசலேம் நகரம் யாருக்குச் சொந்தம் என்பதில் 2 நாடுகளுக்கும் இடையில் மோதல் போக்கு நிலவி வருகிறது.‌

இந்த விவகாரத்தில் பாலஸ்தீனத்தின் காசா நகரில் உள்ள ஹமாஸ் போராளிகளுக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் கடந்த மாதம் 10-ந் தேதி தொடங்கி 11 நாட்கள் கடுமையான சண்டை நடந்தது. இதில் இரு தரப்பிலும் சேர்த்து 250-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். சுமார் 2,000 பேர் படுகாயம் அடைந்தனர். பின்னர் சர்வதேச சமூகத்தின் தொடர் அழுத்தத்தை தொடர்ந்து இரு தரப்பும் சண்டை நிறுத்தத்தை அறிவித்தன.

இந்தநிலையில் சர்ச்சைக்குரிய இஸ்ரேலில் உள்ள மேற்கு கரை பகுதியில் சட்ட விரோதமாக கட்டப்பட்டு வரும் யூத குடியிருப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் பாலஸ்தீனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த ராணுவ வீரர்கள் போராட்டக்காரர்களை விரட்டியடிக்க முயன்றனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. அதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்களை நோக்கி ராணுவ வீரர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் பாலஸ்தீனத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் கொல்லப்பட்டான். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News