செய்திகள்
கோப்புபடம்

கோவை பீளமேட்டில் பட்டப்பகலில் மின்வாரிய ஊழியர் வீடு உள்பட 2 வீடுகளில் 15 பவுன் நகைகள் கொள்ளை

Published On 2021-09-09 14:06 GMT   |   Update On 2021-09-09 14:06 GMT
பீளமேடு பகுதியில் பட்டபகலில் 2 வீடுகளில் மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை:

கோவை பீளமேடு அருகே உள்ள சேரன்மாநகரை சேர்ந்தவர் கணேசன் (வயது 46). மின்வாரிய ஊழியர்.

சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். அப்போது இவரது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், கம்மல், மோதிரம் உள்பட 7 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

மாலையில் வேலை முடிந்து வீடு திரும்பிய கணேசன் வீட்டில் நகைகள் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

விளாங்குறிச்சி லட்சுமி நகரை சேர்ந்தவர் முத்துசாமி (39). இவர் அந்த பகுதியில் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கடைக்கு சென்றார். அப்போது இவரது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் படுக்கை அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த வளையல், வைர கம்மல் உள்பட 8 பவுன் தங்க நகைகள், வெள்ளி நாணயம் உள்பட பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். இரவு வீட்டிற்கு திரும்பிய முத்துசாமி வீட்டில் நகைகள் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இந்த 2 கொள்ளை சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பீளமேடு பகுதியில் பட்டபகலில் 2 வீடுகளில் மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News