செய்திகள்
கைது

சட்டக்கல்லூரி மாணவரிடம் பணம் பறித்த ரவுடி கைது

Published On 2020-11-08 09:11 GMT   |   Update On 2020-11-08 09:11 GMT
தஞ்சையில் சட்டக்கல்லூரி மாணவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது செய்யப்பட்டார். போலீசார் அவரை துரத்திய போது மோட்டார் சைக்கிளில் தவறி விழுந்து காயம் அடைத்தார்.
தஞ்சாவூர்:

தஞ்சை வடக்கு அலங்கம் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மகன் சரவணன் (வயது 23). இவர் திருச்சியில் உள்ள சட்டக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தஞ்சை காமராஜர் தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் பகுதி நேரமாக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் சாந்தபிள்ளை கேட் ஆவின் பாலகம் அருகே வந்துக்கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் தஞ்சை முனியாண்டவர் காலனியை சேர்ந்த பிரபல ரவுடி மார்ட்டின் என்ற லியோ மார்ட்டின் வந்தார். அப்போது, அவர் சரவணனிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து ரூ.2600-யை பறித்து சென்றார். இதுகுறித்து சரவணன் தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மார்ட்டினை வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை தஞ்சை நகர கிழக்கு போலீசார் வெண்ணாற்று பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மார்ட்டின் மோட்டார் சைக்கிளில் வந்தார். வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டு இருப்பதை அறிந்த மார்ட்டின் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி சென்றார்.

இதனை கண்ட போலீசார் அவரை துரத்தி சென்றனர். அப்போது மோட்டார் சைக்கிள் வெண்ணாற்று பாலம் தடுப்பு சுவரில் மோதியதில் மார்ட்டின் கீழே விழுந்தார். இதில் அவருக்கு வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மேலும் அவரை கைது செய்த போலீசார் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News