செய்திகள்
மேட்டூர் அணை

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து மேலும் அதிகரிப்பு

Published On 2020-10-01 07:02 GMT   |   Update On 2020-10-01 07:02 GMT
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 96.64 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 8 ஆயிரத்து 341 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
மேட்டூர்:

காவிரி டெல்டா பாசனப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக பாசனத்திற்காக தண்ணீர் தேவை குறைந்துள்ளது.

நேற்று முன்தினம் பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. மேலும் மழை தீவிரமடைந்ததால் நேற்று காலை முதல் கவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு மேலும் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது அணையில் இருந்து வினாடிக்கு இன்று 6 ஆயிரத்து 850 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 96.64 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 8 ஆயிரத்து 341 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
Tags:    

Similar News