லைஃப்ஸ்டைல்
சருமத்தின் இறந்த செல்களை நீக்கும் இயற்கை பேஸ் பேக்

சருமத்தின் இறந்த செல்களை நீக்கும் இயற்கை பேஸ் பேக்

Published On 2019-08-31 03:03 GMT   |   Update On 2019-08-31 03:03 GMT
சருமத்தின் இறந்த செல்களை நீக்குவதற்கு வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே பேஸ் பேக் செய்து கொள்ளலாம். வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு எப்படி சருமத்தை பராமரிப்பது என்று அறிந்து கொள்ளலாம்.
சருமத்தின் இறந்த செல்களை நீக்குவதற்கு வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே பேஸ் பேக் செய்து கொள்ளலாம். இதற்கு நம் தோலுக்கு தகுந்த மாதிரியான பொருட்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும். மாதத்திற்கொரு முறையாவது இறந்த செல்களை நீக்க வேண்டும். வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு எப்படி சருமத்தை பராமரிப்பது என்று அறிந்து கொள்ளலாம்.

கிளன்சிங்: காய்ச்சாத பால் எடுத்து அதனுடன் கிளிசரின் பத்து சொட்டு, எலுமிச்சைச் சாறு ஐந்து சொட்டு கலந்து அதில் பஞ்சை நனைத்து முகம், கழுத்து மற்றும் கைகள் என அழுந்தித் துடைக்க வேண்டும். இது ஓர் எளிமையான சிறந்த கிளன்சிங் முறை.

ஸ்க்ரப்: நன்கு பழுத்த பப்பாளிப்பழம் அல்லது அன்னாசிப்பழம் அல்லது ஸ்ட்ராபெர்ரிப் பழத்தை மிக்ஸியில் விட்டு தண்ணீர் விடாமல் அரைத்து அதனுடன் இரண்டு சிட்டிகை பட்டைப் பொடி, கால் ஸ்பூன் சர்க்கரை கலந்து அந்தக் கலவையை முகம், கழுத்து, கை போன்ற இடங்களில் வட்டவட்டமாகத் தேய்க்க வேண்டும். இதனால் நம் உடம்பில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கும்.

பப்பாளி, அன்னாசி மற்றும் ஸ்ட்ராபெர்ரி : பழங்களில் உள்ள என்ஸைம்கள் இறந்த செல்களை நீக்கும் தன்மை கொண்டவை. வாரம் இரண்டு முறை இந்த ஸ்க்ரப்பை செய்து கொள்ளலாம்.

ஃபேஸ் பேக்: முகப்பொலிவைக் கூட்டுவதற்காக முகம் மற்றும் கழுத்திற்கு வாரம் ஒரு முறை ஃபேஸ் பேக் போடலாம். வீட்டிலேயே எளிமையாக ஃபேஸ் பேக் தயாரிக்கலாம். அதனை பன்னீருடன் கலந்து முகம், கழுத்துப் போன்ற பகுதிகளில் தேய்த்து 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு கழுவ வேண்டும். இந்த ஃபேஸ்பேக்கை பயன்படுத்த முகச்சுருக்கங்கள் குறையும்.

இப்படி எளிமையான முறையில் நம் அழகை பாதுகாக்கலாம்.
Tags:    

Similar News