ஆன்மிகம்
கடலூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை விழா

கடலூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை விழா

Published On 2021-03-05 07:42 GMT   |   Update On 2021-03-05 07:42 GMT
கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள பழமை வாய்ந்த அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக்கொள்ளை விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 13-ந்தேதி முக்கிய நிகழ்ச்சியான மயானக்கொள்ளை விழாவும் நடக்கிறது.
கடலூர் மஞ்சக்குப்பத்தில் பழமைவாய்ந்த அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மயானக்கொள்ளை விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி காலை 7 மணி அளவில் பெண்ணைஆற்றில் இருந்து கரகம் கொண்டு வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். மதியம் 12 மணிக்கு சாகை வார்த்தலும், மாலை 6.30 மணிக்கு கொடியேற்றமும் நடந்தது.

விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து வருகிற 10-ந்தேதி வரை அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வர உள்ளார். 11-ந்தேதி தேர்த்திருவிழாவும், 12-ந்தேதி ரண களிப்பு, 13-ந்தேதி முக்கிய நிகழ்ச்சியான மயானக்கொள்ளை விழாவும் நடக்கிறது.
Tags:    

Similar News