செய்திகள்
ரபாடா

இந்திய அணிக்கு இதற்குமேல் நெருக்கடி கொடுக்க முடியுமா? எனத் தெரியவில்லை: ரபாடா

Published On 2019-10-15 16:12 GMT   |   Update On 2019-10-15 16:12 GMT
இரண்டு டெஸ்டிலும் தோல்வியடைந்துள்ள நிலையில், இந்திய அணிக்கு நெருக்கடி கொடுக்க முடியுமா? என்பது தெரியவில்லை என ரபாடா தெரிவித்துள்ளார்.
இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா முதல் இரண்டு டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. புனேயில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தென்ஆப்பிரிக்கா அணியால் பேட்டிங்கிலும், பந்து வீச்சிலும் இந்திய அணிக்கு நெருக்கடி கொடுக்க முடியவில்லை. இந்நிலையில் இதற்கு மேல் எப்படி நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று தெரியவில்லை என தென்ஆப்பிரிக்காவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ரபாடா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரபாடா கூறுகையில் ‘‘போதுமான அளவு நாங்கள் இந்திய அணிக்கு நெருக்கடி கொடுத்தோம். இதற்கு மேல் எங்களால் மேலும் நெருக்கடி கொடுக்க முடியுமா? என்பது எனக்குத் தெரியவில்லை.

பேட்ஸ்மேன்கள் மட்டுமல்ல. பந்து வீச்சாளர்களும் எங்களை துவம்சம் செய்துவிட்டனர். அவர்கள் பந்தை சிறப்பான வகையில் ரிவர்ஸ் ஸ்விங் செய்தனர். ஒட்டுமொத்தமாக சிறப்பாக பந்து வீசினார்கள். அவர்களின் ஒட்டுமொத்த தாக்குதலும் எங்களை ஒவ்வொரு விஷயத்திலும் நெருக்கடிக்குள்ளாக்கியது.

இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆகும்போது அவர்களின் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக கையாண்டனர். எங்களால் சிறப்பான முறையில் ரிவர்ஸ் ஸ்விங் செய்ய முடியவில்லை. எங்களுடைய முக்கியமான ஆயுதமே அதுதான்’’ என்றார்.
Tags:    

Similar News