செய்திகள்
கோப்புபடம்

சேலத்தில் கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2020-11-20 09:09 GMT   |   Update On 2020-11-20 09:09 GMT
தமிழ்நாடு சண்முகா பொதுவுடமை கட்டுமான அமைப்புசாரா மற்றும் 12 நல வாரிய தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம்:

தமிழ்நாடு சண்முகா பொதுவுடமை கட்டுமான அமைப்புசாரா மற்றும் 12 நல வாரிய தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். செயலாளர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தார். இதில், தி.மு.க தேர்தல் பணிக்குழு செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வீரபாண்டி ராஜா கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில், கட்டுமான தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, கட்டுமான நல வாரியத்தில் பதிவு, புதுப்பித்தல், கேட்பு மனு அளித்தல் ஆன்லைன் நடைமுறையின் குறைபாடுகளை நீக்க வேண்டும். தமிழ்நாட்டில் படிக்காத தொழிலாளர்கள் தான் அதிகம் உள்ளனர். எனவே அவர்களுக்கு ஓ.டி.பி நம்பர் திட்டத்தை கைவிட வேண்டும். கிராம நிர்வாக அதிகாரியின் கையெழுத்து பெறுவதில் சிக்கல் நீடிப்பதால் ஒரு முறை கையெழுத்து பெற்றாலே போதும் என்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும். கொரோனா காலத்தில் வேலை இழப்பால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள தொழிலாளர்களுக்கு பதிவு புதுப்பிக்காமல் இருந்தாலும் அவர்கள் சூழ்நிலையை கருதி நிவாரண உதவி வழங்க வேண்டும். ஓய்வூதியத்தை மாதம்தோறும் வழங்க வேண்டும். ஆன்லைனில் புதுப்பித்தலுக்கு ஒவ்வொரு முறையும் தொழிலாளி புகைப்படம் எடுத்து வரும் உத்தரவை திரும்பப் பெற வேண்டும். தொழிலாளர்களை அலைக்கழிப்பு செய்யாமல் காலதாமதமின்றி நலத்திட்ட உதவிகள் கிடைக்க உரிய ஆவண செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.சேலம்:

தமிழ்நாடு சண்முகா பொதுவுடமை கட்டுமான அமைப்புசாரா மற்றும் 12 நல வாரிய தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். செயலாளர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தார். இதில், தி.மு.க தேர்தல் பணிக்குழு செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வீரபாண்டி ராஜா கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில், கட்டுமான தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, கட்டுமான நல வாரியத்தில் பதிவு, புதுப்பித்தல், கேட்பு மனு அளித்தல் ஆன்லைன் நடைமுறையின் குறைபாடுகளை நீக்க வேண்டும். தமிழ்நாட்டில் படிக்காத தொழிலாளர்கள் தான் அதிகம் உள்ளனர். எனவே அவர்களுக்கு ஓ.டி.பி நம்பர் திட்டத்தை கைவிட வேண்டும். கிராம நிர்வாக அதிகாரியின் கையெழுத்து பெறுவதில் சிக்கல் நீடிப்பதால் ஒரு முறை கையெழுத்து பெற்றாலே போதும் என்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும். கொரோனா காலத்தில் வேலை இழப்பால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள தொழிலாளர்களுக்கு பதிவு புதுப்பிக்காமல் இருந்தாலும் அவர்கள் சூழ்நிலையை கருதி நிவாரண உதவி வழங்க வேண்டும். ஓய்வூதியத்தை மாதம்தோறும் வழங்க வேண்டும். ஆன்லைனில் புதுப்பித்தலுக்கு ஒவ்வொரு முறையும் தொழிலாளி புகைப்படம் எடுத்து வரும் உத்தரவை திரும்பப் பெற வேண்டும். தொழிலாளர்களை அலைக்கழிப்பு செய்யாமல் காலதாமதமின்றி நலத்திட்ட உதவிகள் கிடைக்க உரிய ஆவண செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
Tags:    

Similar News