ஆன்மிகம்
பிரத்யங்கிரா தேவி

திருவிசநல்லூர் பிரத்தியங்கிராதேவி கோவிலில் 108 சுமங்கலி பூஜை இன்று நடக்கிறது

Published On 2021-08-24 08:34 GMT   |   Update On 2021-08-24 08:34 GMT
திருவிசநல்லூர் பிரத்தியங்கிராதேவி கோவிலில் ஆவணி மாத இரண்டாம் செவ்வாய்க்கிழயைான இன்று மாலை ராகுகால நேரத்தில் சாகம்பரி அலங்காரத்துடன் மாலை 6 மணிக்கு 108 சுமங்கலி பூஜை நடக்கிறது.
கும்பகோணம் அருகே உள்ள திருவிசநல்லூரில் தனிக்கோவில் கொண்டு 12 அடி உயரத்தில் ஐந்து முகங்களுடன் பஞ்சமுக மகா மங்கள பிரத்தியங்கிராதேவி அருள்பாலிக்கிறார். இங்கு அமாவாசை தோறும் நடைபெறும் மிளகாய் யாகம் பிரசித்தி பெற்றது. ஆவணி மாத இரண்டாம் செவ்வாய்க்கிழயைான இன்று மாலை ராகுகால நேரத்தில் சாகம்பரி அலங்காரத்தில் அம்பாள் அருள்பாலிக்கிறார்.

செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. சாகம்பரி அலங்காரத்துடன் மாலை 6 மணிக்கு 108 சுமங்கலி பூஜை நடக்கிறது. சிறப்பு வழிபாடு ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி நந்தினி கணேஷ்குமார் குருக்கள் மற்றும் ஆலய பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News