தொழில்நுட்பம்
கோப்பு படம்: ஹெச்.டி.சி. .யு11

ஏப்ரலில் வெளியாகும் ஹெச்.டி.சி. ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்

Published On 2018-03-16 05:44 GMT   |   Update On 2018-03-16 06:35 GMT
ஹெச்.டி.சி. நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் வெளியீடு குறித்த தகவல்கள் இணையத்தில் கசிந்திருக்கிறது.
புதுடெல்லி:

ஹெச்.டி.சி. யு12 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் இணையத்தில் கசிந்திருந்த நிலையில், யு12 பிளஸ் எனும் மற்றொரு ஸ்மார்ட்போன் குறித்த விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

பிரபல ஸ்மார்ட்போன் டிப்ஸ்டரான எவான் பிளாஸ் தனது ட்விட்டரில் ஹெச்.டி.சி. யு12 பிளஸ் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை பதிவிட்டிருக்கிறார். அதன்படி புதிய ஸ்மார்ட்போனில் டூயல் பிரைமரி கேமரா செட்டப், டூயல் 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. 

முன்னதாக ஹெச்.டி.சி. வெளியிட்ட யு11 EYEs ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டதை போன்ற பொக்கே எஃபெக்ட்களை கொண்டிருக்கும் என்றும் இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போனிற்கு போட்டியாக அமையும் என தெரிவித்திருக்கிறார்.

மற்ற அம்சங்களை பொருத்த வரை 6.0 இன்ச் QHD பிளஸ் ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 6 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ, 12 எம்பி பிரைமரி கேமரா, 16 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, இரண்டு கேமராக்களிலும் சோனி IMX3 சீரிஸ் சென்சார்கள் மற்றும் 3420 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம் என கூறப்படுகிறது.



ஹெச்.டி.சி. யு12 பிளஸ் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

- 6.0 இன்ச் 2880x1440 பிக்சல் குவாட் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் LCD 6 டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் 
- அட்ரினோ 630 GPU
- 6 ஜிபி ரேம்
- 64 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ, ஹெச்.டி.சி. சென்ஸ். UI
- டூயல் சிம் ஸ்லாட்
- 12 எம்பி ஹெச்.டி.சி. அல்ட்ரா பிக்சல் பிரைமரி கேமரா டூயல் எல்இடி ஃபிளாஷ்
- 16 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
- 8 எம்பி + 8 எம்பி டூயல் செல்ஃபி கேமரா
- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68)
- கைரேகை சென்சார்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3420 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- ஃபாஸ்ட் சார்ஜிங்



புதிய ஹெச்.டி.சி. யு12 பிளஸ் ஸ்மார்ட்போன் மே மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்பட்டது. முன்னதாக வெளியான தகவல்களின் படி புதிய ஹெச்.டி.சி. ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்பட்டு இருந்தது

இத்துடன் ஹெச்.டி.சி. டிசையர் 12 மற்றும் டிசையர் 12 பிளஸ் ஸ்மார்ட்போன்களை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. முன்னதாக பிரீஸ் மற்றும் பிரீஸ் பிளஸ் என இரண்டு ஸ்மார்ட்போன்களை உருவாக்கி வருவது தெரியவந்திருந்தது. இந்த ஸ்மார்ட்போன்களில் 5.5 இன்ச் 18:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ ஸ்கிரீன், மீடியாடெக் சிப்செட், 2 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டெர்னல் மெமரி, 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா, 2730 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News