உள்ளூர் செய்திகள்
கொரோனா தடுப்பூசி

பள்ளி மாணவ மாணவிகளுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்

Published On 2022-01-11 10:51 GMT   |   Update On 2022-01-11 10:51 GMT
திருவள்ளூர் நகராட்சி உட்பட்ட தனியார் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளி, அரசு பள்ளி என மொத்தம் 20 பள்ளிகளில் 6,705 பேர் உள்ளனர் ஏற்கனவே 5,700 பேர் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர்.
திருவள்ளூர்:

தமிழகத்தில் கொரோனா 3-வது அலை பரவ தொடங்கி உள்ளது. இதை தடுக்க தமிழக அரசு இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் 15 வயது முதல் 18 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகளுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் திருவள்ளூர் நகராட்சி உட்பட்ட தனியார் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளி, அரசு பள்ளி என மொத்தம் 20 பள்ளிகளில் 6,705 பேர் உள்ளனர் ஏற்கனவே 5,700 பேர் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர்.

இந்நிலையில் திருவள்ளூரில்  உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை சுகாதாரத் துறை சார்பில் 868 மாணவ மாணவியர்களுக்கு முதல் தவனை தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இந்த சிறப்பு முகாமில் சென்னை பேராயம் பேராயர் ஜார்ஜ் ஸ்டீபன் தலைமையில் நடைபெற்றது. தென்னிந்திய திருச்சபை மத்திய வட்டார தலைவர் கிதியோன் தினகரன் அனைவரையும் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் கலந்துகொண்டு மாணவ மாணவியர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை துவக்கி வைத்தனர்.

இந்த தடுப்பூசி முகாமில் 2007 டிச., 31க்கு முன் பிறந்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முதல் கட்டமாக  தடுப்பூசி செலுத்தும் பணி  நடைபெற்றது. இதில் மாணவ மாணவிகள் தடுப்பூசி செலுத்த கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி செலுத்தி கொண்டனர்.

இந்த முகாமில், மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஜவகர்லால், திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன், பள்ளி தலைமையாசிரியர் ஸ்டான்லி தேவபிரியம், மருத்துவர் செவிலியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்
Tags:    

Similar News