ஆன்மிகம்
ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரை வெறிச்சோடி காணப்பட்ட காட்சி.

ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரை வெறிச்சோடியது

Published On 2020-08-19 05:37 GMT   |   Update On 2020-08-19 05:37 GMT
ஆவணி மாதத்தின் சர்வ அமாவாசையான நேற்று ராமேசுவரம் அக்னி தீர்த்த கடல் மற்றும் கோவிலின் ரதவீதி சாலைகள் உள்ளிட்ட இடங்கள் பக்தர்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன.
இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாக விளங்கும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் 23-ந் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனாலும் கோவிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு வழக்கமான 6 கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் ஆவணி மாதத்தின் சர்வ அமாவாசையான நேற்று ராமேசுவரம் அக்னி தீர்த்த கடல் மற்றும் கோவிலின் ரதவீதி சாலைகள் உள்ளிட்ட இடங்கள் பக்தர்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன.

இதுபற்றி யாத்திரை பணியாளர்கள் சங்க தலைவர் பாஸ்கரன் கூறும்போது, “ராமேசுவரம் கடற்கரையில் பூஜை செய்யும் புரோகிதர்கள், கோவிலுக்குள் 22 தீர்த்த கிணறுகளில் தீர்த்தம் இறைத்து ஊற்றும் 400-க்கும் அதிகமான யாத்திரை பணியாளர்கள் மற்றும் கோவிலை சுற்றி பல்வேறு கடைகள் வைத்துள்ள வியாபாரிகள், தங்கும் விடுதியை சேர்ந்தவர்கள் என பலதரப்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆகவே அனைவரின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு செப்டம்பர் 1-ந் தேதி முதல் ராமேசுவரம் கோவிலுக்குள் சமூக இடைவெளியை பின்பற்றி பக்தர்களை அனுமதிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
Tags:    

Similar News