செய்திகள்
மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்து குவிந்த வாழைத்தார்களை காணலாம்.

மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு வாழைத்தார் வரத்து அதிகரிப்பு

Published On 2021-04-29 11:06 GMT   |   Update On 2021-04-29 11:06 GMT
மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு வாழைத்தார் வரத்து அதிகரித்தது. செவ்வாழை ஒரு தார் ரூ.600-க்கு விற்பனையானது.
மேட்டுப்பாளையம்:

மேட்டுப்பாளையம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் விவசாயிகள் பல ஏக்கரில் வாழை சாகுபடி செய்து உள்ளனர். இதனால் விவசாயிகள் உற்பத்தி செய்யும் வாழைத்தார்களை விற்பதற்கு வசதியாக மேட்டுப் பாளையம்-அன்னூர் மெயின் ரோட்டில் காரமடை 4 ரோடு பிரிவில் சந்தை இயங்கி வருகிறது.

வாரந்தோறும் புதன், ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த சந்தை நடக்கும். தற்போது ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் கடந்த வாரத்தில் சனிக்கிழமை நடத்தப்பட்டது.

இந்த நிலையில் நேற்று நடந்த சந்தைக்கு மேட்டுப்பாளையம், அன்னூர் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் வாழைத்தார்களை விற்பனைக்காக கொண்டு வந்து இருந்தனர். அவற்றை வாங்க கோவை, நீலகிரி மாவட்டங்கள் மற்றும் கேரளாவை சேர்ந்த வியாபாரிகள் வந்து இருந்தனர்.

இங்கு நடந்த ஏலத்தில் வியாபாரிகள் போட்டிப்போட்டு வாங்கினார் கள். கடந்த சனிக்கிழமை நடந்த சந்தைக்கு 2 ஆயிரம் வாழைத்தார்கள் மட்டுமே வந்து இருந்தன. ஆனால் நேற்று நடந்த சந்தைக்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைத்தார்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு இருந்தன.

இந்த ஏலத்தில் கதளி கிலோ ரூ.25, நநே்திரன் ரூ.35, பூவன் ஒரு தார் ரூ.500, தேன்வாழை ரூ.450, செவ்வாழை ரூ.600, ரஸ்தாளி ரூ.350, ரொபஸ்டா ரூ.300-க்கும் விற்பனையானது. கடந்த வாரத்தை போலவே இந்த வாரமும் வாழைத்தார் விலை ஒரே சீராக காணப்பட்டது.
Tags:    

Similar News