ஆட்டோமொபைல்
சிஎப் மோட்டோ எம்டி800

சிஎப் மோட்டோ எம்டி800 அட்வென்ச்சர் டூரர் அறிமுகம்

Published On 2021-01-21 08:40 GMT   |   Update On 2021-01-21 08:40 GMT
சிஎப் மோட்டோ நிறுவனத்தின் எம்டி800 அட்வென்ச்சர் டூரர் மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டது.

சீனாவை சேர்ந்த இருசக்கர வாகனங்கள் உற்பத்தியாளரான சிஎப் மோட்டோ தனது எம்டி800 அட்வென்ச்சர் டூரர் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து இருக்கிறது. இது கேடிஎம் 790 அட்வென்ச்சர் மாடலை தழுவி உருவாகி இருக்கிறது. 

புதிய எம்டி800 மாடல் ரோடு மற்றும் ஆப்-ரோடு என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதில் முதல் வேரியண்ட் அலாய் வீல்களும், ஆப்-ரோட் வேரியண்ட் வயர்-ஸ்போக் வீல்களை கொண்டிருக்கிறது. புதிய மாடலில் எல்இடி ஹெட்லைட், பீக் வடிவம் மற்றும் விண்ட்ஸ்கிரீன் வழங்கப்பட்டு உள்ளது.

இத்துடன் பெரிய பியூவல் டேன்க், ஸ்ப்லிட்-ஸ்டைல் சீட், டெயில்-செட் எக்சாஸ்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய எம்டி800 மோட்டார்சைக்கிளில் கேடிஎம் 790 மாடலை போன்றே 799சிசி, பேரலெல் ட்வின், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 95 பிஹெச்பி பவர், 88 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. 

எனினும், எம்டி800 மாடலில் இந்த என்ஜின் வழங்கும் செயல்திறன் விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. இத்துடன் அப்சைடு-டவுன் போர்க், பின்புறம் மோனோ-ஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. 

பிரேக்கிங்கிற்கு முன்புறம் ட்வின் டிஸ்க் பிரேக், பின்புறம் ஒற்றை ரோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. பாதுகாப்பிற்கு புதிய சிஎப் மோட்டோ எம்டி800 மாடலில் ஏபிஎஸ் மற்றும் டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News