ஆன்மிகம்
சபரிமலை கோவில்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆவணி மாத பூஜை நிறைவு

Published On 2021-08-24 07:05 GMT   |   Update On 2021-08-24 08:36 GMT
புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மீண்டும் அடுத்த மாதம் (செப்டம்பர்) 16-ந் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும்.
ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 15-ந்தேதி திறக்கப்பட்டது. 16-ந்தேதி, புகழ் பெற்ற நிறை புத்தரிசி பூஜை நடந்தது. தொடர்ந்து, 21-ந்தேதி திருவோண சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடந்தது. கொரோனா கட்டுப்பாடு விதிகளுக்கு உட்பட்டு தினசரி 15 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

ஆவணி மாத பூஜை நிறைவு நாளான நேற்று சபரிமலையில் சதயம் நாள் சிறப்பு பூஜை வழிபாடுகளுடன், 25 கலச பூஜை, களபாபிஷேகம், மாலையில் சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து படி பூஜை, புஷ்பாபிஷேகம் ஆகியவையும் நடந்தது. ஆவணி மாத பூஜைகள் நிறைவடைந்ததையொட்டி நேற்று இரவு 9 மணிக்கு சபரிமலை நடை அடைக்கப்பட்டது.

புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மீண்டும் அடுத்த மாதம் (செப்டம்பர்) 16-ந் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறும் சிறப்பு பூஜைகளுக்கு பின், 21-ந் தேதி இரவு நடை அடைக்கப்படும்.
Tags:    

Similar News