ஆட்டோமொபைல்
ரெனால்ட் கார்

கார் மாடல்கள் விலையை உயர்த்தும் ரெனால்ட்

Published On 2021-03-26 08:45 GMT   |   Update On 2021-03-26 08:45 GMT
ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் தனது கார் மாடல்கள் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது.

ரெனால்ட் நிறுவனம் இந்திய சந்தையில் கைகர், டஸ்டர், டிரைவர் மற்றும் க்விட் என நான்கு மாடல்களை விற்பனை செய்து வருகிறது. தற்போது இவற்றின் விலையை உயர்த்துவதாக ரெனால்ட் அறிவித்து இருக்கிறது. உற்பத்தி செலவீனங்கள் அதிகரித்து இருப்பதை விலை உயர்வுக்கு காரணமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக 2021 ஜனவரி மாதத்தில் ரெனால்ட் நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை ரூ. 40 ஆயிரம் வரை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது. தற்போதைய விலை உயர்வு ஏப்ரல் 1, 2021 முதல் அமலுக்கு வருகிறது. சமீபத்தில் ரெனால்ட் நிறுவனம் 2021 டிரைபர் மாடலை டூயல்-டோன் நிறங்களில் அறிமுகம் செய்தது.

புது காரில் ஸ்டீரிங் வீல்-மவுன்ட் செய்யப்பட்ட ஆடியோ கண்ட்ரோல், ஓட்டுனர் இருக்கை உயரத்தை அட்ஜஸ்ட் செய்யும் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இவைதவிர புதிய டிரைபர் மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

Tags:    

Similar News