செய்திகள்
முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் கூடுதல் தளர்வுகள் - வணிக வளாகங்கள், உணவகம் திறக்க அனுமதி

Published On 2021-06-13 23:57 GMT   |   Update On 2021-06-13 23:57 GMT
மக்கள், கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். கொரோனா பாதிப்பு அதிகரித்தால், மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
புதுடெல்லி:

டெல்லியில் கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. இதையடுத்து அங்கு இன்று (திங்கட்கிழமை) கூடுதல் தளர்வுகள் அமலுக்கு வருகின்றன. இதுகுறித்து முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-

டெல்லியில், உணவகங்களை 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் திறக்கலாம். மாநகராட்சி மண்டலத்துக்கு ஒன்று வீதம் வாராந்திர சந்தைகளை திறக்கலாம். கட்டுப்பாடுகளுடன் திறக்க அனுமதிக்கப்பட்ட சந்தைகள், வணிக வளாகங்கள் ஆகியவற்றை இனிமேல் தினமும் காலை 8 மணி முதல் இரவு 10 மணிவரை திறந்து வைத்திருக்கலாம்.



மத வழிபாட்டு தலங்களை திறக்கலாம். ஆனால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. பள்ளி, கல்லூரிகள், பயிற்சி மையங்கள், தியேட்டர்கள், மல்டி பிளக்ஸ்கள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி கூடங்கள், பூங்காக்கள், தோட்டங்கள் ஆகியவற்றுக்கு தடை தொடரும். அரசியல், சமூக, மத, கலாசார, பண்டிகை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கிடையாது.

மக்கள், கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். கொரோனா பாதிப்பு அதிகரித்தால், மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News