உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

தமிழக கடலோர பகுதியில் எண்ணெய், எரிவாயு எடுக்க ஆய்வு கிணறுகள் அமைக்க அனுமதிக்க கூடாது

Published On 2022-05-06 07:31 GMT   |   Update On 2022-05-06 07:31 GMT
தமிழக கடலோர பகுதியில் எண்ணெய், எரிவாயு எடுக்க ஆய்வு கிணறுகள் அமைக்க அனுமதிக்க கூடாது என மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு வேண்டுகோள்
நாகர்கோவில்:

தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பின் மாநில நிர்வாக குழு கூட்டம், நாகர்கோவில் மீனாட்சிபுரத் தில் நடைபெற்றது. மாநில தலைவர் வக்கீல் ஜெலஸ்டின் தலைைம வகித்தார். மாநில பொது செயலாளர் எஸ். அந்தோணி, சி.ஐ.டி.யூ. மாநில துணை பொது செயலாளர் குமார், செயல் அலுவலர் கருணாமூர்த்தி, பொருளாளர் ஜெயசங்கரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு பின் நிர்வாகிகள் கூறியதாவது:-

கடந்த 2018-ம் ஆண்டு மத்திய அரசின் குறைந்த நிலபரப்பு உரிமை கொள்கையின் ஒரு பகுதியாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை ஒட்டிய கடல் பகுதியில் இரு ஹைட்ரோ கார்பன் தொகுதிகள் வேதாந்தா நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு தொகுதி 2,574 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண் டதாகும். 

2-வது தொகுதி விழுப்புரத்தில் 139 சதுர கி.மீ., வங்காள விரிகுடாவில் 1,654 சதுர கி.மீ. கடல் பகுதியை உள்ள டக்கியது. இந்த பகுதிகளில் எண்ணெய் எரிவாயு எடுப் பதற்காக ஹைட்ரோ கார்பன் ஆய்வு கிணறுகள் அமைக்க அனுமதிக்கக் கோரி வேதாந்தா நிறுவனம் விண்ணப்பம் செய்துள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு நிலம் மற்றும் கடல் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்கான ஆய்வு கிணறுகள் அமைக்க மத்திய அரசின் அனுமதி அவசியம் இல்லை. மாநில அரசின் அனுமதியோடு ஆய்வு கிணறுகள் அமைக்கலாம் என்ற வகையில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த ஆய்வு கிணறுகள் அமைக்க கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டிய அவசியமில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் ஆய்வு  கிணறுகள் அமைத்தால் கடல் வளம் பாதிக்கப்படும். இவற்றை கருத்தில் கொண்டும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத் திடவும் தமிழ்நாடு அரசு வேதாந்தா நிறுவனத்தின் விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும் என எங்கள் அமைப்பு சார்பில் முதல்-அமைச்சருக்கு வேண்டுேகாள் விடுக்கி றோம். இவ்வாறு கூறினர்.

Tags:    

Similar News