செய்திகள்
டெல்லி மருத்துவ மாணவி கொலை குற்றவாளிகள்

நிர்பயா கற்பழிப்பு வழக்கில் கருணை மனுக்களை நிராகரிக்குமாறு மத்திய அரசுக்கு டெல்லி கவர்னர் பரிந்துரை

Published On 2019-12-04 11:57 GMT   |   Update On 2019-12-04 11:57 GMT
டெல்லியில் மருத்துவ மாணவி ஓடும் பஸ்ஸில் கொடூரமாக கற்பழிக்கப்பட்ட வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டவர் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட கருணை மனுவை நிராகரிக்குமாறு டெல்லி கவர்னர் உள்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்துள்ளார்.
புதுடெல்லி:

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ந்தேதி மருத்துவ மாணவி ஒருவர் ஓடும் பஸ்சில் 6 வாலிபர்களால் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடையவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  6 குற்றவாளிகளில் ஒருவன் சிறார் என்பதால் சிறுவர் ஜெயிலில் அடைக்கப்பட்டான். மீதமுள்ள 5 வாலிபர்களில் ஒருவன் சிறையில் தற்கொலை செய்து கொண்டான்.

இதையடுத்து, இந்த வழக்கில் டெல்லி கோர்ட் மற்ற 4 வாலிபர்களுக்கு மரணதண்டனை விதித்து உத்தரவிட்டது. மரண தண்டனை நிறைவேற்றும் ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில் தங்கள் தண்டனையை குறைக்குமாறு 4 குற்றவாளிகள் சார்பில் கருணை மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டது. 

அந்த கருணை மனு மீதான ஆய்வை டெல்லி கவர்னர் ஆய்வு செய்து வந்தார். நேற்று 4 குற்றவாளிகளின் கருணை மனுக்களை அவர் தள்ளுபடி செய்தார். இதையடுத்து குற்றவாளிகளின் கருணை மனுக்கள் உள்துறை அமைச்ச பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளன.



இந்நிலையில், இந்த வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டவர்கள் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட கருணை மனுக்களில் வினய் சர்மா என்பவரின் மனுவை நிராகரிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு டெல்லி கவர்னர் அனில் பைஜால் பரிந்துரை செய்துள்ளார். 

ஹைதராபாத்தில் 25 வயது பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் கருணை மனுவை நிராகரிக்குமாறு டெல்லி கவர்னர் அனில் பைஜால் பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News