ஆன்மிகம்
ஏலவார்குழலி அம்மன் சமேத ஏடகநாதர் கோவிலில் பிரம்ம தீர்த்த தெப்பத்திருவிழா

ஏலவார்குழலி அம்மன் சமேத ஏடகநாதர் கோவிலில் பிரம்ம தீர்த்த தெப்பத்திருவிழா

Published On 2021-02-01 08:26 GMT   |   Update On 2021-02-01 08:26 GMT
சோழவந்தான் அருகே திருவேடகம் ஏலவார்குழலி அம்மன் சமேத ஏடகநாதர் கோவிலில் 28-ம் ஆண்டு பிரம்ம தீர்த்த தெப்பத்திருவிழா நடைபெற்றது.
சோழவந்தான் அருகே திருவேடகம் ஏலவார்குழலி அம்மன் சமேத ஏடகநாதர் கோவிலில் 28-ம் ஆண்டு பிரம்ம தீர்த்த தெப்பத்திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி நேற்று முன் தினம் காலை சுவாமியும், அம்பாளும் கோவிலில் இருந்து புறப்பட்டு தெப்பத்திருவிழா மண்டகப்படிக்கு வந்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் சுவாமி, அம்பாளுக்கு 21 அபிஷேகங்கள் நடந்தன.

உலக நன்மைக்காக 100-க்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு பூஜை நடத்தினர். இரவு, வெள்ளி சப்பரத்தில் மின்னொளி அலங்காரத்தில் சுவாமியும், அம்பாளும் தெப்பத்தை சுற்றி வலம் வந்தனர். திருமேனி கணேசபட்டர் பூஜைகள் செய்தார். காளியம்மன் கோவில், சித்தி விநாயகர் கோவில் உள்பட வழிநெடுக அபிஷேகம் நடந்தது. இரவு சுவாமி அம்மன் கோவிலை வந்தடைந்தனர்.

சிவ பக்தர்கள் பக்தி இசை நடத்தினர். பரம்பரை அறங்காவலர் சேவுகன் செட்டியார், செயல் அலுவலர் இளஞ்செழியன், ஆலய பணியாளர் முத்துவேல், விழாக்குழு மற்றும் கிராம பொதுமக்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
Tags:    

Similar News