ஆன்மிகம்
கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் ஆயர் நசரேன் சூசை சிலுவைக்கு முத்தமிட்ட போது எடுத்த படம்.

நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் சிலுவை பாதை வழிபாடு

Published On 2019-04-20 03:30 GMT   |   Update On 2019-04-20 03:30 GMT
நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் புனித வெள்ளியையொட்டி சிலுவை பாதை வழிபாடு நடந்தது.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறந்த தினம் புனித வெள்ளியாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு புனித வெள்ளி தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள், சிலுவை பாதை வழிபாடு போன்றவை நடந்தன.

நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் புனித வெள்ளியையொட்டி நேற்று காலை முதலே சிறப்பு ஆராதனைகள் நடந்தது.

பின்னர் இயேசுவின் பாடுகளை தியானிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி சிலுவைக்கு முத்தமிட்டு வழிபாட்டை தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஏராளமானோர் சிலுவையை முத்தமிட்டு காணிக்கை செலுத்தினர்.

இதையடுத்து இரவு 8 மணிக்கு ஆயர் நசரேன் சூசை தலைமையில் சிலுவை பாதை நடந்தது. இயேசு கிறிஸ்து போல் வேடம் அணிந்த ஒருவர் சிலுவையை சுமந்து சென்றார். அவரை பின்தொடர்ந்து, பங்கு மக்கள் பாடல்கள் பாடியபடி சென்று ஆலயத்தை சுற்றி வந்தனர்.

நிகழ்ச்சியில், மறைமாவட்ட அருட்பணியாளர் மைக்கேல் ஏஞ்சல், பங்கு தந்தை கிரேஷ் குணப்பால் ஆராச்சி, இணை பங்குத்தந்தை ஆன்றனி பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மார்த்தாண்டம் சேகர சி.எஸ்.ஐ. ஆலயத்தில் தலைமை போதகர் யோவாஸ் தலைமையில் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. மார்த்தாண்டம் கிறிஸ்து ராஜா ஆலயத்தில் பங்கு தந்தை ஜோஸ் பிரைட் தலைமையில் சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடைபெற்றது. இதுபோல் மலங்கரை கத்தோலிக்க ஆலயங்களிலும், சீரோமலபார் ஆலயங்களிலும் சிலுவை பாதை மற்றும் வழிபாடுகள் நடந்தது.
Tags:    

Similar News