செய்திகள்
சென்னை வானிலை ஆய்வு மையம்

தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம்

Published On 2021-04-11 11:02 GMT   |   Update On 2021-04-11 11:02 GMT
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, இன்றும் நாளையும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். 



இன்று மாலையில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும். 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெரியகுளம், பழனியில் தலா 5 செமீ மழை பெய்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியில் 4 செமீ மழை பெய்துள்ளது.
Tags:    

Similar News