செய்திகள்
அமித் ஷா

அதிமுக- என்டிஏ மக்கள் நலன் குறித்து யோசிக்கிறது: அமித் ஷா

Published On 2021-02-28 13:44 GMT   |   Update On 2021-02-28 13:44 GMT
காங்கிரஸ் 70 ஆண்டுகளில் செய்யாததை நாங்கள் ஏழு ஆண்டுகளில் செய்துள்ளோம் என விழுப்புரம் பொதுக் கூட்டத்தில் அமித் ஷா பேசினார்.
பா.ஜனதா மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா இன்று விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார்.

அப்போது அமித் ஷா கூறியதாவது:-

* தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரத்தை நாட்டு மக்கள் அனைவரும் மதிக்கின்றனர்

*  தமிழ் கலாச்சாரம் இன்றி இந்தியாவின் கலாச்சாரம் இல்லை

*  தமிழில் பேச முடியாத நிலையில் இருப்பதற்கு மிகவும் வருந்துகிறேன்

*  திருவள்ளுவரை பற்றிய அறியவும், தமிழில் பேசவும் விருப்பம் என பிரதமரும் தெரிவித்துள்ளார்

* தமிழ் மண்ணில் பிறந்த பல மகான்கள், உலகளவில் பெருமையை சேர்த்தவர்கள்

*  திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு மக்களை பற்றி கவலை இல்லை.

*  அதிமுக- பா.ஜனதா மக்கள் நலன்களை முன்னெடுக்கும் கூட்டணி.

*  சோனியா காந்தி ராகுலை பிரதமாருக்குவது குறித்து கவலைப்படுகிறார். ஸ்டாலின் உதயநிதியை முதல்வராக்குவது குறித்து கவலைப்படுகிறார். அவர்கள் ஊழல், பிரித்தாளும் அரசியலை பின்பற்றுகிறார்கள்.

* நாட்டிற்கு தலைக்குனிவை ஏற்படுத்திய 2ஜி ஊழலை அரங்கேற்றியது யார்?

*  நாட்டிலேயே நல்லாட்சிக்கான அதிக விருதுகளை வாங்கிய தமிழகம்

*  காங்கிரஸ் 70 ஆண்டுகளில் செய்யாததை நாங்கள் ஏழு ஆண்டுகளில் செய்துள்ளோம்

*  எம்ஜிஆர், ஜெயலலிதா வளர்த்தெடுதத்த அதிமுக இயக்கத்தோடு பாஜக கூட்டணி வைத்திருக்கிறது.

*  தமிழகத்துக்கான திட்டங்களில் மத்திய அரசு எப்போதும் இருந்து பின்வாங்கியது இல்லை.

*  நிதியமைச்சர், வெளியுறவுத்துறை அமைச்சர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். சிறந்த நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் விளங்குகிறார்.

*  மத்திய அரசுடன் மோதல் போக்குடன் செயல்படும் ஆடசி வேண்டுமா?

இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.
Tags:    

Similar News