லைஃப்ஸ்டைல்
முத்து அடை

சத்தான டிபன் முத்து அடை

Published On 2020-02-08 04:23 GMT   |   Update On 2020-02-08 06:19 GMT
ஜவ்வரிசி நம்முடைய உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குவதோடு, எலும்புகளுக்கு வலுவூட்டுகிறது. இன்று ஜவ்வரிசி, பாசிப்பருப்பு சேர்த்து அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்

ஜவ்வரிசி - அரை கப்
பாசிப் பருப்பு - கால் கப்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 3
அரிசி மாவு - 5 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் - கால் கப்
எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்
கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி அளவு
எண்ணெய் - 100 கிராம்
உப்பு - தேவைக்கேற்ப



செய்முறை

வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஜவ்வரிசியை நான்கு மணி நேரம் ஊறவைக்கவும்.

பாசிப்பருப்பை வேகவைத்து மசித்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் ஜவ்வரிசியை போட்டு அதனுடன் வேக வைத்து மசித்த பாசிப்பருப்பு, நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, அரிசி மாவு, தேங்காய்த் துருவல், கொத்தமல்லித்தழை, எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து நன்கு கலந்து, கொஞ்சம் நீர்விட்டு சற்றே கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.

பிசைந்த மாவை அடையாகத் தட்டவும்.

தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது எண்ணெய் விட்டு தட்டிய அடையைப் போட்டு, அடுப்பை `சிம்’மில் வைத்து மெதுவாக இருபுறமும் வேகவிடவும்.

அழகிய, சுவையான முத்து அடை ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News