ஆன்மிகம்
ஒரே கோவிலில் 108 சிவலிங்கங்கள்

ஒரே கோவிலில் 108 சிவலிங்கங்கள்

Published On 2019-07-12 03:59 GMT   |   Update On 2019-07-12 03:59 GMT
ஒரே கோவிலில் 108 சிவலிங்கங்கள் உள்ளன. சிவலிங்க வழிபாடு உடல்பிணியையும், பிறவிப்பிணியையும், போக்குவதாக புராண நூல்கள் தெரிவிக்கின்றன.
சிவலிங்க வழிபாடு உடல்பிணியையும், பிறவிப்பிணியையும், போக்குவதாக புராண நூல்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக சிவாலயங்களில் மூலவர் சிவலிங்கவடிவாக காட்சி அளிப்பார். அம்மன், விநாயகர், முருகன் போன்ற கடவுள்களுக்கு தனித்தனியே சன்னதிகள் இருக்கும். ஒரே கோவிலில் 108 சிவலிங்கங்கள் உள்ளன. இந்த கோவில் தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் உள்ளது.

இலங்கையில் ராவணனை சம்காரம் செய்த தோஷம் அகல ராமபிரான், இந்த கோவிலில் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகவும், இதனால் இங்குள்ள மூலவர் ராமலிங்க சுவாமி என்ற பெயரில் அழைக்கப்படுவதாகவும் தலபுராணம் கூறுகிறது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் உள்ள சிவனை வணங்கினால் நற்பயன்கள் பல கிடைப்பதோடு சகல செல்வங்களையும் பெறலாம் என இங்கு வரும் பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

இந்த கோவில் தஞ்சாவூரில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் கும்பகோணம் செல்லும் சாலையில் பாபநாசத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள அம்மன் பெயர் பர்வதவர்த்தினி. இந்த கோவிலின் வெளிப்பகுதியில் அனுமன் காசியில் இருந்து கொண்டு வந்த அனுமந்த லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் எண்ணற்ற பக்தர்கள் வருகின்றனர்.
Tags:    

Similar News