செய்திகள்
கூட்டத்தில் ப.தனபால் எம்.எல்.ஏ., பேசிய காட்சி.

அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

Published On 2021-11-24 10:19 GMT   |   Update On 2021-11-24 11:38 GMT
பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார்.
அவினாசி:

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு அவினாசியில் உள்ள ஒரு மண்டபத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. 

புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தலைமையில் நடந்த கூட்டத்தில் அவினாசி தொகுதி எம்.எல்ஏ. ப.தனபால், ஒன்றிய செயலாளர்கள் ஜெகதீசன் (அவினாசி மேற்கு), சேவூர் ஜி.வேலுசாமி (வடக்கு), மு.சுப்பிரமணியம். ( தெற்கு), மாவட்ட இணை செயலாளர் எஸ்.லதா, அவினாசி, பூண்டி நகர நிர்வாகிகள், இளைஞரணி நிர்வாகிகள், மகளிரணியினர் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். 

எம்.எல்.ஏ. தனபால் பேசுகையில், பேரூராட்சியை கைப்பற்ற அனைத்து நிர்வாகிகளும் முழுமூச்சுடன் செயல்பட வேண்டும். அவினாசி பேரூராட்சி 18 வார்டுகளிலும் நல்ல வேட்பாளர்களை நிறுத்தி, கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டால் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் பேரூராட்சியை கைப்பற்ற முடியும். 

மேலும் அ.தி.மு.க ஆட்சியில் செய்த சாதனைகளை பொதுமக்கள் மத்தியில் எடுத்து சொன்னால் மக்களிடத்தில் மாற்றம் வருவது உறுதி. இவ்வாறு அவர் பேசினார். காங்கயம் நகர அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு காங்கயம் நகர அ.தி.மு.க. செயலாளர் வெங்கு ஜி.மணிமாறன் தலைமை வகித்தார்.

ஒன்றிய செயலாளர் என்.எஸ்.என்.நடராஜ் முன்னிலை வகித்தார். சட்டமன்ற முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார். இதில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

அப்போது பொள்ளாச்சி ஜெயராமன் நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். தேர்தல் பணிகளை உடனே தொடங்க வேண்டும் என்றார். இதில் அ.தி.மு.க. நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News