தொழில்நுட்பம்
ஆப்பிள் மேக்புக் ப்ரோ

அமெரிக்க விமானங்களில் ஆப்பிள் லேப்டாப்களுக்கு தடை

Published On 2019-08-15 06:12 GMT   |   Update On 2019-08-15 06:12 GMT
அமெரிக்க விமான நிறுவனங்களில் ஆப்பிள் லேப்டாப் மாடல்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இயங்கி வரும் சில விமான நிறுவனங்களின் விமானங்களில் பயணிகள் ஆப்பிள் நிறுவனத்தின் சில லேப்டாப் மாடல்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்படுகிறது. பேட்டரிகளில் பிழை இருப்பதை ஆப்பிள் சமீபத்தில் உறுதிப்படுத்தியதை தொடர்ந்து தடை விதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

ஆப்பிள் மேக்புக் ப்ரோ லேப்டாப் மாடல்களில் திரும்பப் பெறப்பட்ட பேட்டரிகள் பயன்படுத்தப்படுவதை அறிவதாகவும், இதுகுறித்த தகவல்களை அமெரிக்க விமான சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு வழங்கி இருப்பதாக அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுவரை நான்கு விமான நிறுவனங்கள் ஆப்பிள் லேப்டாப் மாடல்களை கொண்டு செல்ல தடை விதித்து இருக்கின்றன.


2015 முதல் பிப்ரவரி 2017 வரை விற்பனை செய்யப்பட்ட 15-இன்ச் ஆப்பிள் மேக்புக் ப்ரோ லேப்டாப்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என டோட்டல் கார்போ எக்ஸ்பர்டைஸ் எனும் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறது.

ஜூன் மாதத்தில் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் முந்தைய தலைமுறை 15-இன்ச் மேக்புக் ப்ரோ யூனிட்களில் பாழான பேட்டரிகள் இருக்கலாம் என தெரிவித்திருந்தது. இவற்றை பயன்படுத்தும் போது லேப்டாப் அதிக சூடாகலாம் என்றும் ஆப்பிள் தெரிவித்தது.

பாழான லேப்டாப் மாடல்கள் செப்டம்பர் 2015 ஆம் ஆண்டு முதல் பிப்ரவரி 2017 வரையிலான காலக்கட்டத்தில் விற்பனை செய்யப்பட்டதாகவும் ஆப்பிள் தெரிவித்தது.
Tags:    

Similar News