லைஃப்ஸ்டைல்
பட்டாசு வெடிக்க போறீங்களா? அப்ப இதையெல்லாம் மறக்காதீங்க...

பட்டாசு வெடிக்க போறீங்களா? அப்ப இதையெல்லாம் மறக்காதீங்க...

Published On 2021-11-03 04:22 GMT   |   Update On 2021-11-03 05:54 GMT
தீபாவளியையொட்டி பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி என்பது பற்றி தீயணைப்பு துறை சார்பில் விளக்கம் அளித்து நோட்டீஸ்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.
தீபாவளியையொட்டி பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி என்பது பற்றி தீயணைப்பு துறை சார்பில் விளக்கம் அளித்து நோட்டீஸ்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.

மத்திய சென்னை மாவட்ட தீயணைப்பு அதிகாரி சரவணன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் இந்த நோட்டீசுகளை வெளியிட்டுள்ளனர். அதில் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது:-

* பெரியவர்களின் மேற்பார்வையில் சிறுவர்கள் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.

* குடிசைகள் இல்லாத திறந்தவெளியில் பட்டாசு வெடியுங்கள்.

* பட்டாசை வெடிக்கும்போது இறுக்கமான ஆடைகளை அணிந்துகொள்ளுங்கள்.

* பெரிய வாளியில் தண்ணீரை நிரப்பி வைத்துக்கொள்ளுங்கள்.

* புஸ்வானம் கொளுத்தும்போது சமதரையில் வைத்து பக்கவாட்டில் நின்று கொள்ளுங்கள்.

* நீண்ட வத்திகளை கொண்டு பட்டாசுகளை தூரத்தில் நின்று வெடிக்க செய்யுங்கள்.

* தீ விபத்து ஏற்பட்டால் உடனே தண்ணீர் ஊற்றி அணையுங்கள். அல்லது கீழே படுத்து உருளுங்கள்.

* தீ புண்ணுக்கு இங்க், எண்ணெய் போன்றவற்றை உடனே போட வேண்டாம். அருகில் உள்ள டாக்டர்களிடம் சென்று காண்பியுங்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News