ஆட்டோமொபைல்
டாடா அல்ட்ராஸ்

டாடா அல்ட்ராஸ் ஸ்பை படங்கள்

Published On 2019-09-15 07:47 GMT   |   Update On 2019-09-15 08:05 GMT
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் அல்ட்ராஸ் காரின் உள்புற ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது முதல் பிரீமியம் ஹேட்ச்பேக் காரை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. வெளியீட்டிற்கு முன் டாடா அல்ட்ராஸ் உள்புற புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இவற்றில் கார் முழுமையான உற்பத்திக்கு தயார் நிலையில் இருப்பது தெளிவாக தெரிகிறது.

டாடா அல்ட்ராஸ் காரில் டூயல்-டோன் இன்டீரியர் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இத்துடன் ஆடியோ மற்றும் குரூஸ் கண்ட்ரோல் வசதிகள் ஸ்டீரிங் வீலில் மவுன்ட் செய்யப்பட்டுள்ளது.

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தின் கீழ் பட்டன்கள் வழங்கப்பட்டுள்ளது. இவற்றுடன் டாடா அல்ட்ராஸ் காரில் வழங்கப்படும் வெவ்வேறு டிரைவிங் மோட்களில் மாற்றிக் கொள்ள பிரத்யேக பட்டன் வழங்கப்படுகிறது. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் செமி டிஜிட்டல் யூனிட் வடிவில் வழங்கப்பட்டுள்ளது.




டாடா அல்ட்ராஸ் காரில் புளு மூட் லைட்டிங் செய்யப்பட்டிருக்கும் என தெரிகிறது. இது வித்தியாசமான தோற்றத்துடன் பிரீமியம் தோற்றத்தை வழங்கும். இந்த ஹேட்ச்பேக் மாடலில் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதியும் வழங்கப்படும் என தெரிகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் பிரீமியம் ஹே்டச்பேக் மாடலாக அலட்ராஸ் இருக்கிறது.

2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அல்ட்ராஸ் கார் முதல்முறையாக காட்சிப்படுத்தப்பட்டது. இந்த கார் 45எக்ஸ் என்ற குறியீட்டு பெயரில் காட்சிப்படுத்தப்பட்டது. டாடாவின் பிரீமியம் ஹேட்ச்பேக் மாடல் அந்நிறுவனத்தின் புத்தம் புதிய ALFA தளத்தில் உருவாகி இருக்கிறது.

புதிய அல்ட்ராஸ் காரில் மேம்படுத்தப்பட்ட 1.2 லிட்டர் ரெவோடிரான் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. தற்சமயம் டாடா டியாகோ காரில் இந்த என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. டிரான்ஸ்மிஷன் யூனிட்களை பொருத்தவரை 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் டூயல்-கிளட்ச் ஆட்டோமேடிக் வேரியண்ட்கள் வழங்கப்படலாம்.

புகைப்படம் நன்றி: Zigwheels
Tags:    

Similar News