ஆன்மிகம்
தெற்கு கிரிவீதியில் கும்மியடித்து ஆடி வந்த பக்தர்கள்.

பழனி முருகன் கோவில் தைப்பூச துளிகள்

Published On 2021-01-29 07:48 GMT   |   Update On 2021-01-29 07:48 GMT
தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய நாள் முதற்கொண்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சாரை, சாரையாக பக்தர்கள் பழனி முருகன் கோவிலுக்கு படையெடுத்தனர்.
பழனி மலைக்கோவிலில் உள்ள பாரவேல் மண்டபம் மலர்களை கொண்டு ஓம் வடிவில் அலங்காரம் செய்யப்பட்டிருந்த காட்சி.

* தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றதை அடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனியில் சங்கமித்தனர். இதையடுத்து பக்தர்களின் பசியை போக்க ஆங்காங்கே உணவு, தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது.

* பழனி அடிவாரத்தில் இருந்து சீரான முறையில் மலைக்கோவிலுக்கு அனுப்பியதால் சிரமமின்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடிந்தது.

* குளத்துரோடு, அடிவாரம் ரோடு, பூங்காரோடு உள்ளிட்ட பகுதிகள் ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டன. அதேநேரத்தில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு அதிக சாலைகள் ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

* பழனி மலைக்கோவிலில் உள்ள பாரவேல் மண்டபம், பல்வேறு வகையான மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இது, பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.

* பழனி பெரியநாயகி அம்மன் கோவில் ரதவீதிகளில் நேற்று தேர் வலம் வந்தபோது ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். இதையடுத்து கோவில் நிர்வாகம் சார்பில் ெஹலிகேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது.

* மலைக்கோவில் மற்றும் தேரோட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பக்தர்களில், முக கவசம் அணியாதவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் முக கவசம் இலவசமாக வழங்கப்பட்டது.

* தேரோட்டத்துக்கு முன்பாக பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு ரதவீதிகள் முழுவதும் சாலைகளில் தண்ணீர் தெளிக்கப்பட்டது.

* பழனி நகராட்சி நிர்வாகம் சார்பில் தைப்பூச திருவிழாவுக்கு என்று தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் நகர் பகுதியில் குப்பைகள் சேராமல் தூய்மையாக வைத்திருந்தனர்.

* பழனி இடும்பன் மலை பகுதியில் நேற்று காலை ஏராளமான பக்தர்கள் சூரிய தரிசனம் செய்தனர்.

* தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய நாள் முதற்கொண்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சாரை, சாரையாக பக்தர்கள் பழனி முருகன் கோவிலுக்கு படையெடுத்தனர்.

* மலர்காவடி, மயில் காவடி, இளநீர் காவடி என பல்வேறு காவடிகளை எடுத்து வந்து பக்தர்கள் அசத்தினர். அலகு குத்தி சில பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

* குழந்தை வரம் வேண்டி பக்தர்கள் சிலர் கரும்பு தொட்டிலை சுமந்து வந்தனர்.

* பழனி ரதவீதிகளில் பெண் பக்தர்கள் கோலாட்டம், கும்மியாட்டம் ஆடியபடி வலம் வந்தனர்.

* பழனி தைப்பூச ேதரோட்டத்தையொட்டி நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கூட்டநெரிசலில் பல்லடத்தை சேர்ந்த குமார், சேலம் அஸ்தம்பட்டியை சேர்ந்த ஹரிப்பிரியா ஆகியோரின் செல்ேபான்கள் காணாமல் போயின. அதனை, போலீசார் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

* பழனி மலைக்கோவில், திருஆவினன்குடி கோவில் மற்றும் அடிவார பகுதி மின்னொளியில் ஜொலித்தன. இதேபோல் பாதயாத்திரை பக்தர்கள் நலன் கருதி ஒட்டன்சத்திரம்-பழனி, தாராபுரம்-பழனி, உடுமலை-பழனி வரை வழிநெடுகிலும் 10 அடிக்கு ஒரு மின்விளக்குகள் வீதம் ஏராளமான விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன.

* விழாவின் சிகர நிகழ்ச்சியான நேற்று நடந்த தைப்பூச தேரோட்டத்தையொட்டி, போலீஸ் டி.ஐ.ஜி.முத்துசாமி தலைமையில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

* தைப்பூச நாளான நேற்று பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். இதனால் அடிவாரத்தில் இருந்து சீரான முறையில் பக்தர்கள் மலைக்கோவிலுக்கு அனுப்பப்பட்டனர். மலைக்கோவிலுக்கு வந்த பக்தர்கள் நேர்த்திக்கடனாக சேவல்களை வழங்கினர்.

* பழனி தைப்பூச திருவிழாவுக்கு வந்த பக்தர்கள், இடும்பன்குளத்தில் புனித நீராடினர். இதனால் ஆழமான பகுதிக்கு பக்தர்கள் செல்வதை தடுக்க தீயணைப்பு துறையினர் ரப்பர் படகில் ரோந்து சென்றனர்.

Tags:    

Similar News