செய்திகள்
லோன்

தமிழக அரசு 9,627 கோடி ரூபாய் கடன் வாங்க மத்திய நிதியமைச்சகம் அனுமதி

Published On 2020-10-14 11:49 GMT   |   Update On 2020-10-14 11:49 GMT
ஜிஎஸ்டி வரி வருவாய் இழப்பீடாக ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு அதிகமாக கொடுக்க வேண்டியதால் வெளிசந்தையில் கடன் வாங்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
மத்திய அரசு மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி வரி வருவாய் இழப்பீட்டை சரிக்கட்டும் வகையில் குறிப்பிட்ட தொகையை வழங்கி வருகிறது. கொரோனா காலத்திற்குப் பிறகு மோதுமான நிதி இல்லாததால் இழப்பீடு வழங்க இயலாது என்பதை மத்திய அரசு வெளிப்படையாக தெரிவித்தது.

அதேவேளையில் இழப்பீட்டை சரிகட்டும் வகையில் வெளிச்சந்தையில் கடன் வாங்கிக்கொள்ள அனுமதி வழங்க தயாராக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. இதற்கு பெரும்பாலான மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.

இதனால் தங்களுடைய ஆலோசனைகளை வழங்க மத்திய நிதியமைச்சகம் கேட்டுக்கொண்டது. அதன்படி 21 மாநிலங்கள் கடன் வாங்க விருப்பம் தெரிவித்தது.

இந்நிலையில் தமிழக அரசு 9,627 கோடி ரூபாய் வெளிச்சந்தையில் கடன் வாங்க மத்திய நிதியமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
Tags:    

Similar News