செய்திகள்
தேமுதிக தலைவர் விஜயகாந்த்

விஜயகாந்திற்கு கொரோனா தொற்று- மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை

Published On 2020-09-24 06:01 GMT   |   Update On 2020-09-24 06:01 GMT
தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை:

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று இரவில் சென்னை, மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் திடீரென்று சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அவருக்கு கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்று தகவல் வெளியானது.

இதையடுத்து விஜயகாந்த் 6 மாதத்திற்கு ஒருமுறை உடல் பரிசோதனைக்காக மருத்துவமனை செல்வது வழக்கம். வழக்கமான பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனை சென்றபோது கொரோனா அறிகுறி தென்பட்டது. கொரோனா அறிகுறி இருந்ததால் சிகிச்சை பெற்ற விஜயகாந்த் தற்போது பூரண நலமுடன் உள்ளார் என்று தே.மு.தி.க. தலைமைக்கழகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நிலை தொடர்பாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்திற்கு கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை சீராக உள்ளது. விஜயகாந்த் முழுமையாக குணமடைந்து விரைவில் வீடு திரும்புவார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News