உள்ளூர் செய்திகள்
சுகாதார திருவிழாவை வெங்கடேசன் எம்.பி. தொடங்கி வைத்தார்.

சுகாதார திருவிழா

Published On 2022-05-05 11:05 GMT   |   Update On 2022-05-05 11:05 GMT
மதுரை கொட்டாம்பட்டி அரசு பள்ளியில் நடந்த சுகாதார திருவிழாவை வெங்கடேசன் எம்.பி. தொடங்கி வைத்தார்.
மேலூர்

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியில் சுகாதார திருவிழா நடைபெற்றது. இதனை மதுரை எம்.பி. வெங்கடேசன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் பல மடாதிபதிகள், உரிமைகள் பழக்கவழக்க ங்கள் சடங்கு கள் உள்ளன. ஆனால் அனைத்தையும் விட மேலானது இந்தநாட்டின் அரசியல் சாசனம். 

சுயமரியாதை, சமத்துவத்தை னைவரும் மதிக்க வேண்டும் அதற்காக நாம் அனைவரும் நம்முடைய பழைய பழக்கவழக்கங்களை அரசியல் சாசனத்துக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும். மதுரை ஆதீனம் உயிரை கொடுத்தாவது தருமபுர ஆதீன பட்டின பிரவேச  பணியை செய்வேன் என்கிறார். சிவபெருமான் அருளிய தமிழுக்கு தற்போது ஆபத்து வந்திருக்கிறது. தமிழை அகற்றிவிட்டு இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிப்பதை மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. 

சிவபெருமான் அருளிய தமிழை காப்பாற்ற மதுரை ஆதீனம் முன் வருவாரா? அப்படி அவர் வந்தால் அவருடன் இணைந்து நானும் போராடுவேன்.

நாட்டின் அன்ன பத்திரம் எல்.ஐ.சி. அதன் பங்குகளை விற்பது மிகக் கொடுமையான முடிவு.பொதுத்துறையை விற்பனை செய்வது துயரமிகுந்த நாள். இதனை கைவிட வேண்டும். பொதுத்துறையை காப்பாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

இந்நிகழ்ச்சியில் மதுரை சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் செந்தில்குமார் மேலூர் தாசில்தார் இளமுருகன் வட்டார வளர்ச்சி அலுவலர் ராமமூர்த்தி ஊராட்சி கொட்டாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்பிரமணியம், ஊராட்சி செயலாளர் சிவா மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News