செய்திகள்
சிபிஐ

ஹத்ராஸ் வழக்கு விசாரணையை ஏற்றுக்கொண்டது சிபிஐ

Published On 2020-10-10 18:41 GMT   |   Update On 2020-10-10 18:41 GMT
ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையை சிபிஐ ஏற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி:

உத்தர பிரதேச மாநிலத்தின் ஹத்ராஸில் பாலியல் வன்முறைக்கு ஆளானதாக கூறப்பட்ட பட்டியல் இனப்பெண் உயிரிழந்த சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்கு மாநில அரசு பரிந்துரைத்தது.

மேலும், அந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் கண்காணிப்புடன் சிபிஐ விசாரிக்க வேண்டும் என அம்மாநில அரசு கோரியுள்ளது. இந்த வழக்கு குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவும் அமைக்கப்பட்டது.

இந்நிலையில், ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ விசாரிப்பதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வழங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து ஹத்ராஸ் வழக்கு விசாரணையை சிபிஐ ஏற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News