செய்திகள்
கேரள முதல்வர் பினராயி விஜயன்

புத்தாண்டு கொண்டாட்டம்- கேரளாவில் பொது இடங்களில் கூட்டம் கூட தடை

Published On 2020-12-31 04:03 GMT   |   Update On 2020-12-31 04:03 GMT
கேரளாவில் புத்தாண்டு தினத்தன்று பொது இடங்களில் கூட்டம் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:

கொரோனா அச்சுறுத்தல் உள்ளதால் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கும்படி மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியது. உருமாறிய கொரோனா பரவ அதிக வாய்ப்புள்ள அனைத்து நிகழ்வுகளையும் உன்னிப்பாக கவனித்து, பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை கூறி உள்ளது.  தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாம் என்றும் அறிவுறுத்தியது.

அதன்படி தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. சென்னையில் நட்சத்திர ஹோட்டல், கேளிக்கை விடுதிகளில் உள்ள பார்களை இரவு 10 மணிக்கு மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கர்நாடகா, ஒடிசா மாநிலங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டது. 

இந்நிலையில் கேரளாவிலும் புத்தாண்டு கொண்டாட்டங்களை இரவு 10 மணிக்குள் முடித்துக்கொள்ளும்படி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News