செய்திகள்
மருத்துவ முகாம்

அரியாங்குப்பம் பகுதியில் மருத்துவக்குழுவினர் வீடு வீடாக சென்று பரிசோதனை

Published On 2020-11-21 06:59 GMT   |   Update On 2020-11-21 06:59 GMT
அரியாங்குப்பம் பகுதியில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களை வீடு வீடாக சென்று மருத்துவக்குழு சந்தித்து அவர்களுக்கு வேறு ஏதேனும் உபாதைகள் ஏற்படுகிறதா? என்று கண்டறிந்து வருகின்றனர்.
அரியாங்குப்பம்:

கொரோனாவினால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு வேறு ஏதேனும் உடல்நலக்குறைவு உள்ளதா? என்பதை கண்டறிய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி அரியாங்குப்பம் பகுதியில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களை வீடு வீடாக சென்று மருத்துவக்குழு சந்தித்து அவர்களுக்கு வேறு ஏதேனும் உபாதைகள் ஏற்படுகிறதா? என்று கண்டறிந்து வருகின்றனர்.

அரியாங்குப்பம் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மைய பொறுப்பு மருத்துவ அதிகாரிகள் தாரணி, கிஷாந்த் ஆகியோர் மேற்பார்வையில் ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் மூசா, முகேஷ், நவீன், குமார், சுகாதார உதவி ஆய்வாளர்கள் ஜெகநாதன், கரிகாலன் மற்றும் ஆஷா ஊழியர்கள் மணிமாலா, ராஜேஸ்வரி, தீபா, ராஜி ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் வீடு வீடாக சென்று ஆய்வு செய்தனர்.

ரத்த அழுத்தம், சர்க்கரையின் அளவு, மூச்சுத் திணறல், உடல் வலி மற்றும் வேறு ஏதேனும் உபாதைகள் ஏற்பட்டுள்ளதா? என்று பரிசோதனை செய்தனர். மேலும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும், அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என்று அவர்களை அறிவுறுத்தினார்கள்.
Tags:    

Similar News