செய்திகள்
தங்க சங்கிலியை போலீஸ் துணை சூப்பிரண்டிடம் ஒப்படைத்த காட்சி.

ஆண்டிப்பட்டி சாலையில் கிடந்த தங்க சங்கிலியை போலீசில் ஒப்படைத்த அ.தி.மு.க. பிரமுகர்

Published On 2021-09-09 12:00 GMT   |   Update On 2021-09-09 12:00 GMT
ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் அய்யனார்புரம் பகுதியை சேர்ந்த பூபாலன் என்பவர் தன்னுடைய தங்க கை சங்கிலி காணாமல் போனதாக புகார் கொடுத்தார்.
ஆண்டிப்பட்டி:

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள சக்கம்பட்டியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 50). ஆண்டிப்பட்டி நகர அ.தி.மு.க முன்னாள் செயலாளர். இவர், நேற்று காலை ஆண்டிப்பட்டி கோர்ட்டு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் தங்க கை சங்கிலி ஒன்று கிடந்தது. அதனை ராமச்சந்திரன் எடுத்து அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தார். அந்த பகுதியில் சங்கிலியை தவற விட்டவர்கள் யாரும் இல்லை. இதையடுத்து அந்த சங்கிலியை ஆண்டிப்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு தங்ககிருஷ்ணனிடம் ஒப்படைத்தார். அது சுமார் 2 பவுன் இருந்தது. அந்த கை சங்கிலியை தவற விட்டவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் அய்யனார்புரம் பகுதியை சேர்ந்த பூபாலன் என்பவர் தன்னுடைய தங்க கை சங்கிலி காணாமல் போனதாக புகார் கொடுத்தார். இதுகுறித்து போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவரை அங்கு அழைத்து வந்து சங்கிலியின் எடை, அடையாளம் குறித்து போலீசார் விசாரித்தனர். பின்னர் அந்த சங்கிலி அவருடையது என போலீசார் உறுதி செய்தனர். இதையடுத்து அந்த கை சங்கிலியை பூபாலனிடம் போலீசார் ஒப்படைத்தனர். சாலையில் கீழே கிடந்த தங்க கை சங்கிலியை ஒப்படைத்த ராமச்சந்திரனை போலீசார் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.
Tags:    

Similar News