செய்திகள்
வாழைத்தார்கள்

ஊடரங்கால் விலை இல்லாததால் மரத்திலேயே பழுத்து வீணாகும் வாழைத்தார்கள்

Published On 2021-06-07 10:39 GMT   |   Update On 2021-06-07 10:39 GMT
ராதாபுரம் அருகே உள்ள சுப்பிரமணியபேரி கிராமத்தில் பெரிதளவில் விற்பனை இல்லாததால் வாழைத்தார்களை விவசாயிகள் பறிக்காமல் விட்டு விடுகின்றனர்.
பணகுடி:

கொரோனா ஊரடங்கால் கடைகள் திறக்கப்படாததால் பல்வேறு இடங்களில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை விற்பனை செய்ய முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக ராதாபுரம் அருகே உள்ள சுப்பிரமணியபேரி கிராமத்தில் பெரிதளவில் விற்பனை இல்லாததால் வாழைத்தார்களை விவசாயிகள் பறிக்காமல் விட்டு விடுகின்றனர். இதனால் விவசாயிகளும், வியாபாரிகளும் பெரிதளவில் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

இந்த பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகளில் பழங்கள் பழுத்தும் பறிக்கப்படாமல் வீணாகும் நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்து உள்ளனர். விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News