ஆன்மிகம்
அழகர்மலை நூபுர கங்கை தீர்த்தத்தில் பக்தர்கள் நீராடல்

மாசி களரி விழா: அழகர்மலை நூபுர கங்கை தீர்த்தத்தில் பக்தர்கள் நீராடல்

Published On 2021-03-10 06:51 GMT   |   Update On 2021-03-10 06:51 GMT
மதுரை அழகர்மலை உச்சியில் உள்ள நூபுர கங்கை தீர்த்தத்தில், மாசி களரி திருவிழாவையொட்டி அலங்காநல்லூரை அடுத்த வலசை கம்மாளபட்டியை சேர்ந்த பக்தர்கள் புனித நீராடினர்.
மதுரை அழகர்மலை உச்சியில் உள்ள நூபுர கங்கை தீர்த்தத்தில், மாசி களரி திருவிழாவையொட்டி அலங்காநல்லூரை அடுத்த வலசை கம்மாளபட்டியை சேர்ந்த பக்தர்கள் புனித நீராடினர்.

தொடர்ந்து மேளதாளம் முழங்க தீர்த்தம் எடுத்து வந்தனர். பின்னர் பொருசுப்பட்டி வகையறாவுக்கு பாத்தியப்பட்ட அழகு நாச்சியம்மன், பாரி கருப்பசாமி உள்பட 21 தெய்வங்களுக்கு திருவிழாவில் பூஜைகள் நடந்தன. இதில் கடந்த 5 நாட்களாக கோவில் முன்பாக பூசாரிகள் சலங்கை கட்டி சாமி ஆடினர்.

நாளை (வியாழக்கிழமை) மகா சிவராத்திரியையொட்டி சிறப்பு பூஜைகள், சாமி ஆட்டம் நடைபெறும்.
Tags:    

Similar News