உள்ளூர் செய்திகள்
ஆர்ப்பாட்டம்

திருவள்ளூரில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Published On 2022-04-16 12:20 GMT   |   Update On 2022-04-16 12:20 GMT
தமிழகம் முழுவதும் கிடப்பில் உள்ள ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்த கோரி திருவள்ளூரில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர்:

திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே நேற்று திருவள்ளூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் கிடப்பில் உள்ள ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்தக்கோரியும், மாவட்டத் தலைநகராக விளங்கும் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட் டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் தினேஷ்குமார் தலைமை தாங்கினார். 
மாநிலத் அமைப்பு துணை செயலாளர் நா.வெங்கடேசன்,மாவட்ட செயலாளர்கள் சேகர்,ரமேஷ், சிவப்பிரகாசம், மாவட்ட துணை செயலாளர் செஞ்சி குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணை பொது செயலாளர் டாக்டர் வ.பாலா என்கின்ற பாலயோகி, மாவட்ட செயலாளர் அம்பத்தூர் கே.என்.சேகர் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்கள். 

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு தமிழகத்தில் கடந்த 10 ஆண்டு காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ள திட்டங்களை நிறைவேற்ற வலியுறுத்தியும், தென்னக ரயில்வே துறைக்கு நிதி ஒதுக்காமல் புறக்கணிக்கப்படுவதை கண்டித்தும்,உரிய நிதி ஒதுக்கீடு செய்ய கோரியும், தென்னக ரயில்வேயில் அதிக காலி பணியிடங்கள் உள்ளதால் அதில் தமிழகத்தை சேர்ந்தவர்களை மட்டுமே நிரப்ப கோரியும், கோவை எக்ஸ்பிரஸ் மற்றும் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களை திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நிறுத்தக் கோரி திரளான பா.ம.க நிர்வாகிகள் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். முடிவில் திருவள்ளூர் நகர செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News