செய்திகள்
கோப்புப்படம்

18 முதல் 44 வயது ஆனவர்களுக்கு இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி எவ்வளவு?

Published On 2021-05-03 17:04 GMT   |   Update On 2021-05-03 17:04 GMT
மே 1-ந்தேதியில் இருந்து இந்தியாவில் 18 வயதிற்கு மேற்பட்டோர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
இந்தியாவில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில், பெரும்பாலான மாநில அரசுகள் 18 வயதில் இருந்து 44 வயதிற்குட்பட்டோருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தன.

இதனைத் தொடர்ந்து மத்திய அரசும் அனுமதி அளித்து, அதற்கான முன்பதிவை தொடங்கி, மே 1-ந்தேதியில் இருந்து தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவித்தது.

பொதுமக்களும் ஆர்வத்துடன் முன்பதிவு செய்தனர். ஆனால் பல மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதால் மே-1ந்தேதி தடுப்பூசி பணியை தொடங்கவில்லை. ஒன்றிரண்டு மாநிலங்கள் தொடங்கின.

இந்த நிலையில் தற்போது வரை 18 வயதில் இருந்து 44 வயதிற்கு உட்பட்டோருக்கு சுமார் 4 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் 2,15,185 பேருக்கு செலுத்தப்பட்டதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News