ஆட்டோமொபைல்
ஹோண்டா லிவோ

ஹோண்டா பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் டீசர் வெளியீடு

Published On 2020-06-26 07:47 GMT   |   Update On 2020-06-26 07:47 GMT
ஹோண்டா நிறுவனத்தின் புதிய லிவோ பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.

ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் புதிய பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய பிஎஸ்6 லிவோ மோட்டார்சைக்கிளுக்கான  டீசரை ஹோண்டா வெளியிட்டுள்ளது.

புதிய ஹோண்டா லிவோ பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹோண்டா நிறுவனம் தனது வாகனங்களை ஒவ்வொன்றாக பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்து வருகிறது. சமீபத்தில் ஹோண்டா கிரேசியா 125 ஸ்கூட்டரை அப்டேட் செய்தது.

இவற்றை தொடர்ந்து ஹோண்டா லிவோ பிஎஸ்6 இந்திய சந்தையில் வெளியிடப்பட இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் அதிக அம்சங்கள் மற்றும் பல்வேறு புதிய அப்டேட்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதனை நிரூபிக்கும் வகையில் டீசர் வீடியோ அமைந்துள்ளது.

அந்த வகையில் புதிய லிவோ பிஎஸ்6 மோட்டார்சைக்கிளில் 110சிசி என்ஜின் வழங்கப்படுகிறது. இதே என்ஜின் மேம்பட்ட சிடி110 டிரீம் மோட்டார்சைக்கிள் மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 109.51சிசி என்ஜின் 8.7 பிஹெச்பி பவர், 9.3 என்எம் டார்க் செயல்திறன் மற்றும் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News