செய்திகள்
இந்திய-அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரிகள் பேச்சுவார்த்தை

இந்திய-அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை

Published On 2020-10-26 12:31 GMT   |   Update On 2020-10-26 12:31 GMT
இந்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு மந்திரி மார்க் எஸ்பர் தலைமையில் இருநாட்டு அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
புதுடெல்லி:

இந்திய, அமெரிக்க வெளியுறவு மற்றும் ராணுவ மந்திரிகள் இடையே கடந்த 2018-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நேரடி பேச்சுவார்த்தை (2+2 பேச்சுவார்த்தை) நடந்து வருகிறது. 

அவ்வகையில் மூன்றாவது 2+2 பேச்சுவார்த்தை இன்று மற்றும் நாளை டெல்லியில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ, ராணுவ மந்திரி மார்க் எஸ்பர் ஆகியோர் இன்று இந்தியா வந்தடைந்தனர்.

இந்நிலையில், இந்திய-அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை இன்று டெல்லியில் நடைபெற்றது. இதில் ராஜ்நாத்சிங் மற்றும் மார்க் எஸ்பர் தலைமையில் இந்திய-அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் இந்திய பாதுகாப்பு படையின் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி ஜெனரல் மனோர் முகுந்த் நரவானே, விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ். பதாரியா மற்றும் கடற்படை தளபதி கரம்பீர் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அமெரிக்க பாதுகாப்புத்துறையின் முக்கிய அதிகாரிகளும் பங்கேற்றனர். 

இதில் பாதுகாப்பு துறையில் இரு நாடுகளுக்கு இடையே நல்லுறவை வலுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டது.

இதற்கிடையில், இருநாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகள் மட்டத்திலான கூட்டு சந்திப்பு நாளை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  
Tags:    

Similar News