ஆன்மிகம்
குரு பகவான்

குமரி மாவட்ட கோவில்களில் குருப்பெயர்ச்சி விழா நாளை நடக்கிறது

Published On 2021-11-12 07:22 GMT   |   Update On 2021-11-12 07:22 GMT
இந்த ஆண்டுக்கான குரு பெயர்ச்சி விழா நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் குருப்பெயர்ச்சி விழா நாளை நடக்கிறது.
குருபகவான் ஒவ்வொரு ஆண்டும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான குரு பெயர்ச்சி விழா நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. நாளை மதியம் 2.48 மணிக்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார். இதையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் குருப்பெயர்ச்சி விழா நாளை நடக்கிறது.

சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் நாளை அதிகாலை 5 மணிக்கு அபிஷேகம், 6 மணிக்கு தீபாராதனை நடைபெறும். மாலை 4.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து பக்தர்கள் தங்களது பரிகாரங்களை நிவர்த்தி செய்யும் வகையில் தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை மாலை, வெள்ளை அரளி மாலை, மஞ்சள் துண்டு, முல்லைப்பூ மாலை, மற்றும் தங்களது ராசி பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்துகொள்வார்கள். மேலும் பரிகார பூஜைகளும் செய்வார்கள்.

இதைப்போல் சுசீந்திரம் தாளகுளம் பிள்ளையார் கோவில், களியல் மகாதேவர் கோவில், நாகர்கோவில் வடசேரி சோழராஜா கோவில், காசி விஸ்வநாதர் கோவில், பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவில், தெரிசனங்கோப்பு ராகவேஸ்வர் கோவில், கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில், தாழக்குடி ஜெயந்தீஸ்வரர் கோவில், வடிவீஸ்வரம் அழகம்மன் கோவில், களியங்காடு சிவன் கோவில், ஆரல்வாய்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் மற்றும் குமரி மாவட்டத்தில் குருபகவான் சன்னதிகள் உள்ள கோவில்களில் குருப்பெயர்ச்சி விழா மற்றும் சிறப்பு வழிபாடுகள் நாளை நடக்கிறது.
Tags:    

Similar News